தூத்துக்குடி அதிமுகவில் மீண்டும் தலை தூக்கும் சி.த.செல்லப்பாண்டியன்

A.D.M.K

தூத்துக்குடி அதிமுகவில் மீண்டும் தலை தூக்கும் சி.த.செல்லப்பாண்டியன்

என்னதான் அமுக்கி அமுக்கி வைத்தாலும் பதவியும்,செல்வாக்கும் இருந்தால் எப்போ வேண்டுமானாலும் எழுந்து வந்துவிடுவர் என்பார்கள் விபரம் அறிந்தவர்கள். அப்படித்தான் எழுந்து வந்து கொண்டிருக்கிறார் தூத்துக்குடி அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன். 

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, அமைச்சராக, தூத்துக்குடி மாவட்ட செயலாளராக வலம் வந்தவர் சி.த.செல்லப்பாண்டியன். அதிமுகவில் அவ்வப்போது நடைபெறும் அதிரடி ஆக்ஸனில் பதவிகளை இழந்தார். பதவிகளில் இருந்து பதவிகளை இழந்திருந்த எஸ்.பி.சண்முகநாதன் அந்த பதவிகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அதன்பலனாக எஸ்.பி.சண்முகநாதன் தெற்கு மாட்ட செயலாளர் ஆனார். அன்று முதல் இன்றுவரை கட்சி நிகழ்வுகளில் கூட செல்லப்பாண்டியனை கலந்து கொள்ளவிடாதபடி தடுத்து வருகிறார் எஸ்.பி.சண்முகநாதன். அதிமுகவில் குழப்பம் நிலவிய காலத்தில் குழம்பி போய் அல்லாடியவர் செல்லப்பாண்டியன். அதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட எஸ்.பி.எஸ், அதையே காரணமாக வைத்து செல்லப்பாண்டியனை தடுக்கும் வேலையில் இருந்து வருகிறார். ஆனாலும் கட்சித் தலைமையிடம் தனக்கான இடத்தை பெற்றிருக்கிறார் செல்லப்பாண்டியன். யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி சி.த.வுக்கென்று இடம் கொடுத்திருக்கிறார். 

இந்தநிலையில் மாநில அதிமுக வர்த்தக அணி சார்பில் தூத்துக்குடியில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை சுமார் ரூ.10 லட்சம் செலவு செய்து  23ம் தேதி ஒரு நாள் முன்னதாகவே ஆட்சிகளை திரட்டி நலத்திட்டங்கள் வழங்கும் விழாவை  நடத்தியிருக்கிறார் சி.த.செல்லப்பாண்டியன். தையல்மிஷின், கிரைண்டர், மிக்சி, சைக்கிள், கிரிக்கெட் உபகரண பொருட்கள், சில்வர்குடம், அலுமினிய டவரா, இட்லி கொப்பரை உள்பட மழைவௌ்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவராண பொருட்கள் வழங்கப்பட்டது.   

இந்த விழாவிற்கு தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தலைமை வகித்தார். பகுதி செயலாளர் பொன்ராஜ், கவுன்சிலர் ஜெயராணி, முன்னாள் தொகுதி இணைச்செயலாளர் ஞாயம் ரோமால்ட், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், வக்கீல் கோமதி மணிகண்டன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் மேலூா் கூட்டுறவு வங்கி இயக்குநர் திருமணி, மாவட்ட பிரதிநிதி ஜேடியம்மாள், வட்டசெயலாளர் ஜெயக்குமார், பகுதி சிறுபான்மை அணி செயலாளர் அசன், முன்னாள் மாவட்ட எம்.ஜி,ஆர் இளைஞர் அணி இணைச்செயலளார் ஞான்ராஜ், முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ், வக்கீல் ராஜாராம், வட்டச்செயலாளர் அருண்குமார், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகரன், சார்லஸ் நெப்போலியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு வரவேற்றார்.  

இதில், சி.த.செல்லப்பாண்டியன் பேசும்போது, அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்து வழிநடத்தி முதலமைச்சராக மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி, இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்ற இலக்கணத்திற்கேற்ப அவர் வாழ்ந்து மறைந்தபின் அவரது வழியில் ஜெயலலிதா கட்சியை ரானுவ கட்டுப்பாடுடன் வழிநடத்தி முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில் மக்கள் நலன் ஓன்று தான் முக்கியம் என்று வாழ்ந்து மறைந்தபின் நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடியார் தலைமையில் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். இதுபோன்ற ஆட்சி வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனா், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கனிமொழி கொடுத்த வாக்குறுதி என்ன? மதுவால் தமிழகத்தில் நிறைய விதவைகள் உள்ளனர். இதற்கு காரணமாக இருக்கின்ற மதுவை திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்திட்டு மதுவை ஓழிப்போம் என்று கூறினார். ஆனால் அதை செய்தாரா? இல்லை. அதே போல் நீட் தோ்வு திமுக ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்திடுவோம் என்று கூறினார்கள் அதுவும் செய்யவில்லை திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலைதான் அதே போல் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரபோராரு என்று கூறி ஊர் முழுக்க பெட்டியை வைத்துக்கொண்டு மனுக்கள் போடுங்கள் நாங்கள் தீர்வு கானுகிறோம் சாவி என்னிடம் இருக்கிறது. என்று ஸ்டாலின் சொன்னார். இன்று அந்த பெட்டியையும் கானோம் சாவியையும் கானோம் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்க வில்லை. இப்படி பட்ட ஏமாற்று வேலையில் ஈடுபடும் திமுக ஆட்சிக்கு பாடம் புகட்டிட எடப்பாடியார் வழியில் அனைவரும் துணை நின்று வரும் நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். இனி வரும் காலம் எடப்பாடியின் காலம் என்று பேசினார். 

மேலும் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ நீலமேகவர்ணம், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கிருஷ்ணா என்ற ராதாகிருஷ்ணன், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ராஜகோபால், மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் ராஜாசிங், டாஸ்மாக் சங்க செயலாளர் விஜயகுமார், காயல்பட்டிணம் நகர்மன்ற உறுப்பினர் அன்வர், முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராஹீம், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், சங்கரி, பகுதி இணைச்செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், அந்தோணி சேவியர், முன்னாள் மாநில மீனவர் கூட்டுறவு இணைய இயக்குநர் கிளமென்ஸ், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோணிராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்   ஷர்மிளா அருள்தாஸ், முன்னாள் வட்ட செயலாளர்கள், ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், கருப்பசாமி, அசோகன், பாக்கியராஜ், திருமணி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், கருப்பசாமி, சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், முருகன், ராஜ்குமார் தெர்மல் அய்யாச்சாமி, மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோணிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், சிவசாமி, வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ், மகளிரணி பாலம்மாள், முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டச்செயலாளர் மில்லை ராஜா நன்றியுரை கூறினார்.