உடல் உஷ்ணத்தை தடுக்க வெட்டி வேர் குடிநீர் - தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்படுகிறது

Health News

உடல் உஷ்ணத்தை தடுக்க வெட்டி வேர் குடிநீர் - தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்படுகிறது

தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயுஷ் மருத்துவ பிரிவு சார்பில் உடல் உஷ்ணத்தை தடுக்க வெட்டி வேர் குடிநீர் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆயுஷ் மருத்துவ பிரிவு சார்பாக வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம் முகாமில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ், வெயில் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறித்து விளக்கினார். ஹோமியோபதி மருத்துவ அலுவலர் லட்சுமி காந்த், வெப்ப அலை குறித்த பாதிப்புகளை விளக்கினார். இம் முகாமில் பங்குபெற்ற அனைவருக்கும் உடல் உஷ்ணத்தைத் தடுக்க வெட்டிவேர் குடிநீர் வழங்கப்பட்டது. 

இம்முகாமில் மருந்தாளுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனையில் தினமும் வெட்டி வேர் குடிநீர் வழங்கப்படும் என ஆயுஷ் மருத்துவர் ஜான் மோசஸ் தெரிவித்தார்.