அனைவருக்கும் தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள் - நடுநிலை.காம்

Dheepawali

அனைவருக்கும் தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள் - நடுநிலை.காம்

ஒவ்வொரு தனி மனிதன் மனத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கும் சிறப்பு விழா தீபாவளி பண்டிகையாகும். அநீதி, அக்கிரம சிந்தனையை ஒழுத்ததை கொண்டாடும் விழாவான இந்த விழா தற்போது, இந்தியாவையும் தாண்டி உலகில் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 

அத்தகைய தீபாவளி பண்டிகை இன்று(12.11.2023) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் எழுந்து உடலையும், மனதையும் சுத்தம் செய்து, புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரும் மக்கள், பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.  அனைவரும் இந்த நாள் முழுவதும் மகிழ்ச்சி கடலில் நீந்தவேண்டும் என்று நடுநிலை.காம் வாழ்த்துகிறது. 

-ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்