வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக வாக்களிக்க கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்
Election news
வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக வாக்களிக்க கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் விபரங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி வாக்காளர் அடையாள அட்டை முக்கிய ஆவணமாகும். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்காதவர்கள் அதற்கு மாற்றாக ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வு ஊதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
nadunilai.com