சொத்து வரி கட்ட தவறிய கட்டிடங்களில் பைப்லைன் கட் - தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி
Tuty city corporation
தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்திருக்கும் கட்டிடங்களில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரமடையும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 2025- 26ம் ஆண்டு வரையிலான, அதாவது 31.3-2026 வரையிலான காலத்திற்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு தாரர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அக்கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்திரவின்படி, கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுரையின்படி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 24,29,38,39,41, ஆகிய வார்டுகளுக்குட்பட்ட வடக்குரதவீதி, சந்தை ரோடு மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு, மற்றும் குரூஸ்புரம் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சம் 2025 26ம் ஆண்டு முதல் அதிகபட்சம் 2022-23ம் ஆண்டிலிருந்து சொத்துவரி நிலுவை தொகை ரூ.6000 இலிருந்து 95 ஆயிரம் வரை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவையினை 3 நாட்களுக்குள் செலுத்தாவிடில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் திடக்கழிவு மேலாண்மை வரி பாதாள சாக்கடை கட்டணம் போன்ற இனங்களை நடப்பு காலம் வரை செலுத்தி இருக்கிறீர்களா என்பதனை சரி பார்த்து, நிலுவை இருப்பின் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்த்திட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
nadunilai.com