திருச்செந்தூர் முருகன் கோவில் சொத்துக்களின் நிலையையும் ஆய்வு செய்ய வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

Thiruchendur Murugan

திருச்செந்தூர் முருகன் கோவில் சொத்துக்களின் நிலையையும் ஆய்வு செய்ய வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

தமிழகத்தின் பூர்வீக கலாசாரத்திற்கு ஆதாரமான இந்து சமய கோவில்களுக்கு சொந்தமாக அசையாக சொத்துக்கள் ஏராளம்  இருக்கிறது. கடந்த காலங்களில் பக்தர்கள் வழங்கிய சொத்துக்களையும் இந்து சமய அறநிலையத்துறைதான் கவனித்து வருகிறது. சில அசையா சொத்துக்கள் வாடகைக்கு விடப்படுவதும், அதன் மூலம் வரும் தொகையை அறநிலையத்துறை வசூல் செய்வதும் வழக்கம். 

இந்தநிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை சிலர் அபகரிக்க முயன்றது, அது குறித்து வழக்கு பதிவு, நீதிமன்றம் விசாரணை, சிறை என்கிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆயக்குடி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் நிலத்திலும் அதுபோல் கைவைக்கப்பட்டிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்படிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் இந்து சமய பக்தர்கள், அனைத்து இந்து கோவில்களின் சொத்துக்களையும் அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

குறிப்பாக திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்திலாண்டர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் விவசாய நிலங்கள் உண்மையில் இந்துக்களிடம்தான் இருக்கிறதா? குத்தகை எடுத்தவர்கள் தற்போதைய மார்க்கெட் ரேட் படி குத்தகை பணம்  கொடுக்கிறார்களா?,கோவிலுக்கு சொந்தமாக எவ்வளவு நிலங்கள் இருக்கிறது? அது எங்கெல்லாம் இருக்கிறது?. போலியான ஆவணங்கள் மூலம் சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா?. குறிப்பாக தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான சில நிலங்கள் மற்றும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிலங்களை சில தனியார் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் அவர்கள் பெயருக்கு பத்திரம் பதிவு செய்துவிட்டனர் என்கிற குற்றம்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. 

அதனை இந்து அறநிலையத்துறை தீர விசாரித்து, குற்றம்சாட்டு உண்மை என்றால் உரியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் கோவில்நிலங்கள் அனைத்தையுக் மீட்க வேண்டும் என்று அப்பகுதி திருச்செந்தூர் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் பக்தர்கள் கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர்.