திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் விபத்தில் பலி !
Accident
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கச்சேரி தெருவை சேர்ந்த செல்வராஜ் நாடார் மகன் அமிர்த கண்ணன் (41).இவர் திருச்செந்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், முதுநிலை வட்டார வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல அரசு பணிகளை முடித்துவிட்டு, நேற்று (புதன்கிழமை) இரவு 8.45 மணியளவில் பழையகாயலுக்கு தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
ஆத்தூர் அருகே வரண்டியேல் விலக்கில் உள்ள வாக்கால்பாலம் தண்ணீர்பந்தல் பகுதியில் வந்தபோது பழுதாகி ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்புறத்தில், அவரது ஆக்டிவா வாகனம் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் பலத்த காயம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமிர்த கண்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, குரும்பூர் காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழுதான லாரியை ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த டிரைவர் சக்கையா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த வருவாய் ஆய்வாளர் அமிர்த கண்ணனின் மனைவி சீதா. இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் கழித்து கடந்த 30 நாட்களுக்கு முன்புதான் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று கூறப்படுகிறது.
nadunilai.com