மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு மோகன் சி.லாசரஸ் உதவி.!

Nalumavadi

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு மோகன் சி.லாசரஸ் உதவி.!

நாசரேத்,டிச.23:மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புறை யூர்,மணத்தி,மேலக்கல்லாம் பாறை, கீழக்கல்லாம்பாறை, குருகாட்டூர், குட்டித்தோட்டம், நல்லூர், சேதுக்குவாய்த் தான் உள்ளிட்ட கிராமத்தி னர் சுமார்10 ஆயிரம் பேர்க ளுக்கு  3 வேளை உணவு களை நாலுமாவடி நல்ல சமாரியன் சங்கத்தினர் மற்றும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளையினர், புதுவாழ்வு சங்கத்தினர் சார்பில் சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்.

கடந்த சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை விடாது பெய்த அட மழையி னால் குளங்கள் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர்வெள்ளமாக சென் றதால் அப்பகுதிமக்கள் வசி க்கும் வீடுகளில் வெள்ளம் புகுந்து ஒருவேளை உண வுக்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனைக் கேள்விப்பட்ட தூத்துக்குடி மாவட்டம்,நாலு மாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம், புது வாழ்வு சங்கம், நல்ல சமாரியன் சங்கம் ஆகியவற்றின் நிறு வனருமான சகோ. மோகன் சி.லாசரஸ் நேரில் சென்று பார்வையிட்டு இயேசு விடு விக்கிறார் ஊழியர்கள்,புது வாழ்வு சங்க நிர்வாகிகள், நல்ல சமாரியன் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உதவிகளுடன் கிராம மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு மூன்றுவேளை உணவுகளை வழங்கி வருகிறார்.

மேலும் அவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவு வகைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.  பாதிக்கப் பட்ட கிராமங்களையும் சகோ. மோகன் சி.லாசரஸ் நேரில் பார்வையிட்டு நிவா ரண உதவிகள் வழங்குவது குறித்து ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி னார். மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை படகுமூலம்மீட்டு அவர்களை நாலுமாவடியில் தங்க வைத்து உணவுகள் வழங் கப் பட்டு வருகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.