நீங்கள் வெற்றிப் பெறப் பிறந்தவர்கள்!

news news

நீங்கள் வெற்றிப் பெறப் பிறந்தவர்கள்!

இந்த உலகத்தில் பிறந்த பல வெற்றியாளர்கள் சொல்வது என்னவென்றால், தோல்விகள்தான் வெற்றியின் முதல்படி என்று. ஆனால், உண்மையில் தோற்றுப் போனவர்களை ஏறி மிதித்துச் செல்ல இந்த உலகம் தயாராகி விடுகிறது. 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் அளவிலான ஓட்டப் பந்தயங்களில் மட்டும் ஒலிம்பிக் வெற்றியாளனாகவும் மற்றும் உலக வெற்றியாளனாகவும் வலம்வந்த உசேன் போல்ட் அவர்களை நியாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிற இந்த உலகம் 5000 மீட்டர் மற்றும் 10000 மீட்டர் அளவிலான கடுமையான ஓட்டப் பந்தயங்களில் பல முறை ஒலிம்பிக் வெற்றியாளனாகவும் மற்றும் உலக வெற்றியாளனாகவும் வலம்வந்த மோ ஃபராஹ் அவர்களை நியாபகம் வைக்கத் தவறிவிட்டது. 

இந்த உலகம் வேகமாக ஓடுபவனைத் தான் ஏற்றுக் கொள்ளும் என்றால் நாம் ஏன் உலகத்தின் ஓட்டத்தில் வேகமாக ஓட வேண்டும். இங்கு வெற்றி பெறுவதைத் தவிர வேறு சிந்தனையோ அல்லது யோசனையோ இருக்கக் கூடாது. நாம் பிறப்பினால் மதம் மற்றும் சாதிகளால் வேறுபடுபடுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், நாம் இரத்தத்தினாலும், அன்பாலும் மற்றும் நட்புகளாலும் பிணைக்கப் பட்டிருக்கிறோம். நாம் பிறந்த குழந்தையாக இருக்கும்போது நம் தாயிடம் தாய்ப்பாலைக் கூடக் கேட்கத் தெரியாமல் இருந்தோம். ஆனால், இன்று நாம் உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளாகவும், புரட்சியாளர்களாகவும், கற்றறிந்தவர்களாகவும், எழுத்தாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், தத்துவவாதிகள் மற்றும் இலட்சியவாதிகளாகவும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளாகவும், கலைஞர்கள் மற்றும் அறிஞர்களாகவும், சட்ட மேதைகள், மற்றும் பொருளாதார நிபுணர்களாகவும், கட்டிடக் கலை மற்றும் விஞ்ஞானிகளாகவும், கலை மற்றும் பண்பாடு போன்ற பல கல்வி சார்ந்த மற்றும் துறை சார்ந்த படிப்புகளில் தேர்ச்சிப் பெற முடிந்த நம்மால் ஏன் பல துறைகளில் சாதனைகளை அடைய முடியாது.

நம்மிடம் இல்லாத அதிகாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் சாதி, மத ஏற்றத் தாழ்வுகளை முதலில் நம்மிடம் இருந்து அகற்ற வேண்டும். வெற்றிக்கு இலக்குகள் கிடையாது. நாம் பெறும் வெற்றி என்பது நம்மைச் சுற்றிச் சுற்றிப் பலமுறை வலம்வரும் என்று சொல்லும் இந்த உலகம்தான் ஒருமுறை தோல்வியடைந்தவரை ஏறிமிதித்துச் செல்லத் தயாராகி விடுகிறது.  நான் வெற்றியடைந்து விட்டேன் என்று ஒரு வெற்றியாளர் சொல்வதை எப்படி நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். வெற்றிக்கு புள்ளிகள் கிடையாது; காற்புள்ளிகள் மட்டுமே. நாம் ஏன் ஒரே இலக்கை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றியைத் தேடி ஓட வேண்டும். வெற்றி என்பது ஒரு இலக்கு அல்ல; வெற்றி என்பது ஒரு பயணம். பொதுநலத்திற்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவும், சமுதாய நல்லிணக்கம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு போன்ற மாபெரும் புரட்சிகளுக்காகவும் நாம் வாழ்க்கை முழுவதும் பயணம் செய்தாக வேண்டும். அந்த பயணத்தில் வாழ்க்கை முழுவதும்கூட போராட்டங்கள் இருக்கலாம். ஆனால், அது ஒரே இலக்காக இருக்கக் கூடாது. 

அது எல்லைகளற்ற, வரம்பற்ற மற்றும் அளவிடப்படாத இலக்குகளாக நீண்டு கொண்டே செல்ல வேண்டும். அப்போது இந்த உலகம் நம்முடைய வெற்றியை மட்டும் படிக்காது; அதைவிட பல மடங்கு அதிகமுள்ள நம்முடைய வாழ்க்கை முழுவதும் உள்ளப் போராட்டங்களைப் பற்றிதான் வரலாற்றில் படிக்கும். Success is not a Destination; Success is a Journey 

- கோவை வேல்மணி முருகன்