ஆதார்–பான் இணைப்பு: டிசம்பர் 31 கடைசி தேதி

Aadhaar-Pan

ஆதார்–பான் இணைப்பு: டிசம்பர் 31 கடைசி தேதி

பான் அட்டை வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் அட்டையுடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும்.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை : ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட பான் அட்டை செயல்படாததாக (Inactive) மாற்றப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. இதனால் வருமான வரி தாக்கல், வங்கி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நிதி பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஆதார்–பான் இணைக்காதவர்கள் தற்போது இணைப்பதற்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு பான் அட்டை பெற்றவர்கள், டிசம்பர் 31 வரை எந்த அபராதமும் இன்றி ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பான் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கடைசி நாளுக்குள் ஆதார்–பான் இணைப்பை முடிக்குமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.