கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பில்லாமல் தோற்றுபோனது திமுகவும், அதிமுகவும்
Election news
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர போகிறோம் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்தபோது அது, இந்த அளவிற்கு மாற்றத்தை கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
விஜயின் வருகைக்கு முன்பாக அதிமுகவும், திமுகவும் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சி செய்தது. இதற்கு முன்பாக ஆட்சி கட்டிலில் இருந்து இறங்கிய காங்கிரஸ், மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கோஷம் எழுப்பினாலும் அதற்கான முயற்சியெதுவும் எடுப்பதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக, அதிமுக அல்லது திமுகவோடு கூட்டணி வைத்து காலத்தை ஓட்டி வருகிறது. அதேவேளை, தமிழகத்திற்குள் நுழைந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக முயற்சி செய்யும்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிராக செயல்பட துவங்கின. திமுக போன்ற கட்சிகள் பாஜகவை எதிரியாக காண்பித்து அதற்கு எதிரான விளம்பரம் மூலமே ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அதிமுகவை எதிரியாக பார்க்க வேண்டிய திமுக, பாஜகவை மெயின் எதிரியாக உருவகப்படுத்தியே அரசியல் செய்தது.

தமிழகத்தில் ஐந்து வருடகாலமாக ஆட்சி செய்து வந்த திமுக, தனது கூட்டணி கட்சியினர் எந்த பிரச்னையும் இல்லாமல் மீண்டும் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர உதவுவார்கள் என்று நினைத்தது. ஆனால் விஜயின் வருகை தமிழக அரசியல் கட்சிகள் பலவற்றிற்கு தைரியத்தை கொடுத்தது. கூட்டணி ஆட்சிக்கு தயார் என்ற விஜயின் அறிவிப்பு பல அரசியல் கட்சிகளுக்கு ஆசையை தூண்டியது. இந்தநிலையில் தேர்தல் வேலையை துவங்கிய திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரி போன்ற கட்சிகள் கடைசி நேரத்தில் கொடுத்த டார்ச்சர் அளவிடமுடியாத இடையூறாகும். அதனால் நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சியை ஆதரித்தவர்கள், கூட்டணி கட்சியை கைவிட்டதாகவே தெரிகிறது.
தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுகதான் என்பதையும் தாண்டி தாம்தான் அரசியல் சாணக்கியன் என்று நினைத்து, தலைமை பொறுப்பை தக்க வைப்பது மட்டுமே தனது இலக்காக கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, சொந்த கட்சிக்குள் உள்ளவர்கள், கூட்டணி கட்சியினர் மத்தியில் ராணுவ ஸ்டைலில் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் அதிமுகவைவிட்டு பலர் வெளியேறும் நிலை ஏற்பட்டது. தேர்தல் பிரசாரத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் முன்னாள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் அதிகாரம் எடப்பாடியால் குறைந்து போனது. கூட்டணிக்கு காத்துக்கிடந்த பல கட்சியினரும் கடைசி கட்டத்தில் கைவிரிக்கப்பட்டு, அவர்கள் எதிராக செயல்படும் நிலை ஏற்பட்டது. அதனால் நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சியை ஆதரித்தவர்கள், கூட்டணி கட்சியை கைவிட்டதாகவே தெரிகிறது.
மெகா, மஹா கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கினாலும் ஹீரோயிஷத்தை தனது பலமாக கொண்ட நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக்கழகம் என்கிற தனது கட்சியை களத்தில் இறக்கிவிட்டார். அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்குள் நடைபெற்று வந்த குழப்பங்களை பார்த்து சோர்ந்து போயிருந்த தமிழக மக்களுக்கு தவெக சரியான தீர்வாக தெரிந்தது. இளைஞர் சக்தியின் எழுச்சி மிக வலிமை கொண்டது என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வியாபித்தது தவெக. இதுவரை அதன் சக்தியை பார்க்காத அரசியல் வட்டாரங்களும், ஊடக உலகமும் மிக எளிதாகவே எடைபோட்டது. தேர்தல் நாளில் அலைகடலென திரண்டு வந்து கடமையாற்றிய கூட்டத்தில் இளைஞர் சமூகம் மட்டும் இல்லை, அனைத்துவகையான மக்களும் பங்காற்றிவிட்டனர். இந்த எழுச்சிக்கு கிடைத்த விடையாக இப்போது விஜய் வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.
தனது கட்சி வெற்றி பெறவேண்டும் என்று உழைத்தவர்கள், தனது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று உழைத்ததாக தெரியவில்லை. அந்த வகையில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பில்லாமல் திமுகவும், அதிமுகவும் பின் தங்கிபோக, அசட்டு தைரியத்துடனும், முழு நம்பிக்கையுடனும் செயல்பட்ட தவெக விஜய் வெற்றி வாகை சூடியிருப்பதாகவே தெரிகிறது.
nadunilai.com