நாசரேத் சீரணி கலை அரங்க வளாகத்தில் காமராஜருக்கு திரு உருவச்சிலை அமைக்க கனிமொழி கருணாநிதியிடம் கோரிக்கை!

nazareth

நாசரேத் சீரணி கலை அரங்க வளாகத்தில் காமராஜருக்கு  திரு உருவச்சிலை அமைக்க கனிமொழி கருணாநிதியிடம் கோரிக்கை!

நாசரேத்,டிச.05:நாசரேத் சீரணி கலையரங்கம் இடத் தில் பெருந்தலைவர் காம ராஜர் வெண்கல திரு உரு வச் சிலை அமைக்க வேண் டும் என கனிமொழி கரு ணாநிதி எம்.பி.,யிடம் நாசரேத் பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் ஐஜினஸ் குமார் கோரிக்கை மனு கொடுத்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காமராஜர் ஆதித்த னார் கழக செயலாளரும் நாசரேத் பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ் குமார் நாசரேத் வருகை தந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியி டம் நேரில் கொடுத்த மனு வில் கூறியிருப்பதாவது:- 

நாசரேத் பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலராக காமராஜர் ஆதித்தனார் சார்பாக வெற்றி பெற்று மக்கள் பணி செய்து வருகி றேன்.நாசரேத் பேரூராட்சி யில் சுமார் 25 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசி த்து வருகின்றனர். நாசரேத் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் மதிக்கக் கூடிய தலைவர்கள் பெருந் தலைவர் காமராஜர் மற்றும் டாக்டர் முத்தமிழறிஞர்  கலைஞர் ஆகியோர் ஆவர். கல்வியில் சிறந்து விளங் கும் நாசரேத்நகரில் கல்வித் தந்தை பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவச் சிலை இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. கர்மவீரர் காமராஜர் பெய ரில் நாசரேத்பேருந்து நிலை யம் அமைய பெற்றுள்ளது, நாசரேத் மக்களுக்கு கிடை த்த வரப்பிரசாதம் ஆகும்.

இதற்கு மேலும் ஒரு மணி மகுடம் சூட்டும் விதமாக தாங்கள், தங்கள் ஆட்சி காலத்தில் நாசரேத் பேரூரா ட்சிக்கு சொந்தமான சீரணி கலையரங்கம் இடத்தில் பெருந்தலைவர் காமராஜ ருக்கு திரு உருவ வெண்க லச்சிலை அமைத்து நாசரேத் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திட கேட் டுக்கொள்கிறேன்.இதனை தாங்கள் நாசரேத் மக்களா கிய எங்களுக்கு நிறைவே ற்றி தருவீர்கள் என்று நம் புகிறோம். இவ்வாறு அவர் கொடுத்த மனுவில் குறிப் பிட்டுள்ளார்.