நாசரேத் நகரில் பெருந்தலைவர் காமராஜருக்கு திருஉருவசிலை - காமராஜர் ஆதித்தனார் கழகம் தீர்மானம்

Nazareth news

நாசரேத் நகரில் பெருந்தலைவர் காமராஜருக்கு  திருஉருவசிலை - காமராஜர் ஆதித்தனார் கழகம் தீர்மானம்

 நாசரேத்,மார்ச்.18:

நாசரேத்தில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில்  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாசரேத் கழக அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஐஜினஸ்குமார்  தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

 கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கழக நிறுவனத்தலைவர் கராத்தே செல்வின் நாடாரின்  27வது நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற  26ம் தேதி  நெல்லையில் கழகப் பொதுச் செயலாளர் மின்னல்  அந்தோணி நாடார்  தலைமையில்  மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த அமைதியாக பங்கேற்பதோடு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்பு  கிடைக்கும்  வகையில்  நாசரேத்_ சாத்தான்குளம் ரோட்டின் அருகில் அமைந்துள்ள பிடாநேரி சிப்காட்டில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

உடன்குடி அனல் மின் நிலையத்தில் தமிழக மக்களுக்கு 80%வேலை வாய்ப்பும், அதில் உள்ளூர் மக்களுக்கு 50% வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் எனவும், திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நாசரேத் மற்றும் அதன் சுற்று ப்பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பயன் பெறும் வகையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனை அமைத்து தர வேண்டும் எனவும், சமீபத்தில்  மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட குளம் மற்றும் கால்வாயின் கரைப்பகுதியை பலப்படுத்தும் பொருட்டு கற்களை பதித்து  மீண்டும் உடையாதவாறு  செய்ய பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும், நாசரேத் நகரில் பெருந்தலைவர் காமராஜருக்கு  திருஉருவசிலை அமைத்து தர வேண்டும் எனவும் மற்றும்  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்ட பின்பு ஏற்பட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பின்னடைவை சரிசெய்யும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பன்னாட்டு மின்சார கார் மற்றும் ஜேஎஸ்டபுல்யூ தொழிற்சாலையை  அதே இடத்தில் நிறுவ முயற்சி எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில் நெல்லை மாவட்ட செயலாளர் திருப்பதி ,மாநில தொழிற்சங்க துணைத்தலைவர் பழனி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் தாமஸ் ,மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஜெயபால், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் விமல், திருச்செந்தூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் மதன்குமார், நகர இளைஞரணி இணைச் செயலாளர் சந்திரசேகர், உடன்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வாசகன், துணைச் செயலாளர் வல்ல முத்து, ஆழ்வை ஒன்றிய செயலாளர் டேனி ஜெபசிங், ஆழ்வை ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் சகாயராஜ் இணைச் செயலாளர் யோவான்,ஆழ்வை ஒன்றிய தொழிற்சங்க துணைத் தலைவர் பெருமாள் ஆழ்வை ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் ஐபல், துணைச் செயலாளர் ஆபிரகாம் ஆழ்வை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் லிங்க பெருமாள், நாசரேத் நகர ஒருங்கிணைப்பாளர் காட்வின், நகர அவைத் தலைவர்  ரவி, நகர இளைஞரணி துணை செயலாளர் மோகன், ஆழ்வை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துணைத் தலைவர் அந்தோணி, நகரத் தகவல் தொழில்நுட்ப இணைத்தலைவர் ஆண்ட்ரூஸ்  திலக், வழக்கறிஞர் சரவணன்மற்றும் அட் ரின், சிவகுமார் ,முனியாண்டி ,ராஜன், ஞானம், அரவிந்த் ,இசக்கிமுத்து மற்றும் காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளரும் , நாசரேத் பேரூராட்சி 3 வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ்குமார் மற்றும் நிர்வாகிகள்   செய்திருந்தனர்.