5 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கு - 61 வயது நபருக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

crime

5 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கு - 61 வயது நபருக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். 

விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் எட்டயபுரம் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த முருகன் (61) என்பவரை மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம்-அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துகுமாரி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர்கள் சமுத்திரகனி மற்றும் சங்கீதா ஆகியோரையும் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் பாராட்டினார்.