பொன்ராதாகிருஷ்ணன்,நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தூத்துக்குடியை சுத்தமாக்கப்போகிறது பாஜக
Bjp
முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடியை சுத்தமாக்கும் பணி வரும் 12ம் தேதி நடைபெறுகிறது என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு சேவா பாரதி(ஆர்.எஸ்.எஸ்)அமைப்பின் தலைமையில் அதன் பரிவார் இயக்கங்களான பி.ஜே.பி, இந்து முன்னணி வி.ஹெச்.ஏ.பி.வி.பி போன்ற அமைப்புகள் மழை வெள்ளத்தையும் பொறுப்படுத்தாமல் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்ஹி செய்து வந்திருக்கின்றன. மழை வெள்ளஹ்தில் குப்பையான மாநகரை தூய்மைப்படுத்த தூய்மை தூத்துக்குடி என்ற பெயரில் 60 வார்டுகளுக்கும் சுத்தம் செய்யும் பணி வரும் 12ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 6.30 முதல் அனைத்து வார்டுகளிலும் நடைபெற இருக்கிறது. தூய்மை பணியில் கலந்து கொள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக சட்ட மன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், நகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி,முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா மற்றும் பரிவார் அமைப்புகளின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும் தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
பொதுமக்களும், தன்னார்வ தொண்டு நிறுவங்களும் இந்த தூய்மை பணியில் கலந்து கொண்டு தூத்துக்குடியை தூய்மையான மாநகராட்சியாக ஆக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட தலைவர் கூறியுள்ளார்.