விலைவாசி உயர்வை சமாளிக்கும் வருமானம் பெற்று வாழ்க - நாம் இந்தியர் கட்சித் தலைவர் என்.பி.ராஜா
N.P.Raja
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். 2024 ம் ஆண்டின் இறுதி நாள் இன்று. அடுத்து 2025ம் ஆண்டு பிறக்க போகிறது. பல்வேறு நன்மைகளும், இடர்பாடுகளும் கலந்த ஆண்டாகவே 2024ம் ஆண்டு இருந்தது. இனிவரும் 2025ம் ஆண்டு முழுவதும் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்கிற விருப்பமே உலகம் அனைவர் மனதிலும் இருக்கின்றன. இயற்கை அமைப்பின் ஒத்துழைப்பே மக்களின் சுபிட்சத்திற்கு ஆதாரமாகும். அதாவது சரியான அளவில் மழை பெய்து தேவையான அளவில் வேளாண்மை உற்பத்தி பெருக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.
அந்த ஆசை புத்தாண்டில் நிகழ் வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்தி, வேண்டி வருகின்றனர். அதுபோல் நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி.ராஜாவும், பிறக்கும் புத்தாண்டு விளைச்சல் பெருகி, வரிகள் மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வருமானம் கிடைக்கப்பெற்று, நோயின்றி, விபத்தில்லா ஆண்டாக ஒவ்வொரு குடிமக்களுக்கும் அமைய வாழ்த்துகிறோம் என்று அறிக்கை மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.