தாமிரபரணி – வைப்பாறு இணைப்புத்திட்டம் எப்போது நிறைவேறும்? - ஆவலுடன் மக்கள்
Thamiraparani - vaipaaru
தாமிரபரணி ஆற்று நீரால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. அதே நேரத்தில் இந்த மாவட்டங்களின் வடபகுதியில் உள்ள எல்லையோர பகுதி விவசாய நிலங்கள் எல்லாம் மானாவாரி நிலங்களாக காட்சி தருகின்றன. பருவமழையை நம்பி மட்டும் விவசாயம் செய்யப்படுகிறது. இந்தப்பகுதியில் நிலத்தடி நீரும் அதலபாதாளத்தில் உள்ளது. இதனால், கிணறு விவசாயமும் பாதித்துவிட்டது. தாமிரபரணிக்கு அடுத்து விருதுநகர் மாவட்டத்தை உள்ளடக்கி ஓடும் வைப்பாற்றில் எப்போதாவதுதான் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
40 ஆண்டுகால கோரிக்கை!
இதனால், வைப்பாற்றில் 2புறங்களிலும் விவசாயத்துக்கு பதில் கருவேல மரங்கள் மட்டுமே காணப்படுகிறது. இந்த நிலையில்தான், தாமிரபரணி- வைப்பாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்.என்று கிராம மக்களும், விவசாயிகளும் 40 ஆண்டுக்கும் மேலாக குரல் கொடுத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பாற்று ஓடை, மலட்டாறு ஓடை, கல்லாறு, வைப்பாறு ஆகிய பகுதிகளில் குறைந்த மழை நீரே ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை சீவலப்பேரி தடுப்பணையில் இருந்து 40மீட்டர் நீரேற்றம் செய்யது 12.5 கி.மீ.. தூரத்தில் உள்ள பூவானி, குவசன்குளம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்த 60 கி.மீ, நீளத்துற்கு புதிய கால்வாய்அமைத்து உப்பாறு, மலட்டாறு, கல்லாறு மற்றும் வைப்பாறு ஆற்றின் முத்தலாபுரம் கிராமத்தின் அருகே இணைக்கப்படும்.
ரூ 264 கோடி திட்டம்
இந்த திட்டத்தில் தாமிரபரணியிலிருந்து 200 கன அடி நீர் நீரேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்முலம் தாமிரபரணியிலிருந்து வெளியேறும் உபரி நீரில் 173 மில்லியன் கன அடி நீரை விவசாயத்திற்து பயன்படுத்தலாம். இந்த திட்டத்தைரூ264 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் என்று 2020 ம் ஆண்டு அப்போதைய முதல்வா;எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கிடப்பில் கிடக்கும் திட்டம்
இந்த திட்டம் தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. திட்டம் நிறைவேற்றறப் பட்டால் விவசாயம் மட்டும் அல்ல நிலத்தடி நீர் உயர்ந்து 300க்கும் அதிகமான கிராமங்கள் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு விடும் என்று மக்கள் நம்பினர். ஆனால் திட்டம் அறிவித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த திட்டத்துக்கான ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்த தி.மு.க.., அரசு இந்த திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றும் என்று நினைத்த மக்களின் கனவு கானால் நீராகி விட்டது. ஆட்சி மாறி 3 ஆண்டுகளைக் கடந்து சென்றபிறகும் நாட்கள் தான் ஒடுகின்றன.
40 ஆண்டுக்கு முன் வைப்பார் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுதத்து ஓடயது. மழைக்காலங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆற்றில் மணலும் அதிகம் சேர்ந்திருந்தது.
1996ம் ஆண்டில் வைப்பாற்றில் மணல் எடுப்பதற்காக முதல் முறையாக அயன்ராசாப்பட்டி, கீழ்நாட்டு குறிச்சி ஆகிய இடங்களில் தனியார் மணல்குவாரிகள் அமைக்கப்பட்டன. அன்றே வைப்பாற்றின் மகிமை மங்கிவிட்டது. 500 ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த மணல் 20அடி ஆழம் வரை ராட்சத ஜே.சி.பி., இயந்திரங்களைக் கொண்டு அள்ளப்பட்டு விட்டன.
நிலத்தடி நீர் குறைந்தது
இப்போது மலடாகிப்போன வைப்பாற்றாக காட்சி தருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் வேலிக்கருவை காடுகளாக காட்சியளிக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கும்.
வைப்பாறு நதி பாயும் இடங்கள் அருகில் மேலக்கரந்தை, வெம்பூர், கீழக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் மையங்கள் அமைக்க விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. அங்கு அமையும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் தேவை அதிகரிக்கும். ஆதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் வைப்பாற்றிலிருந்து ஆழ்குழாய் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லவேண்டும். இல்லையென்றால் நிலத்தடி நீரை உறிஞ்சி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த துவங்கினால், அந்த பகுதி கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். ஏனென்றால் குடிநீர் பயன்பாட்டில் 60 சதவீதம் நிலத்தடி நீரையே குடிநீராக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
அரசு நிறைவேற்ற வேண்டும்
தாமிரபரணி – வைப்பாறு இணைப்பு திட்டம் நறைவேற்றப்படும்போது, தொழிற்சாலைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும். விவசாய நிலங்களும் பயன்பெரும். நிலத்தடிநீரும் உயரும்.கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் வலியுத்தி வருகின்றனர்.