கனிமொழி எம்.பிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்

Minister Anitharadhakrishnan wishes Kanimozhi MP a happy birthday

கனிமொழி எம்.பிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்

திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி  பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், சென்னையில் கனிமொழி எம்.பியை சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருடன் திமுக வர்த்தக அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர் ஆகியோர் இருந்தனர்.