தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

Congress News

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி,டிச.22

தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி பிறந்தநாள் விழா, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் உமா மகேஸ்வரிக்கு பாராட்டு விழா மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு காலண்டர் வழங்கும் விழா ஆகியவை தூத்துக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றன.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் டேவிட் பிரபாகரன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் இக்னேஷியஸ், ஆராய்ச்சித்துறை மாவட்ட தலைவர் சிவராஜ் மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எஸ்டி–எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம் வரவேற்புரையாற்றினார்.

விழாவில் உரையாற்றிய பெருமாள்சாமி, “கட்சி தலைமையின் உத்தரவிற்கிணங்க அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையுடன் கட்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் காலங்களில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வம் பெருந்தகை தலைமையிலும், கட்சியின் வளர்ச்சிக்காக முழு மனதோடு உழைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விவசாய பிரிவு பேரையா, ரூல்ஸ்வெல்ட் சுந்தர், சுரேஷ்குமார், முருகேசன், வழக்கறிஞர் செல்வம், காமராஜ், சேக்ஸ்பியர், ஆனந்தராஜ், முத்துராஜ், பிரைன்நாத், அசனார் செல்வம், செல்வமுருகன், பாலகிருஷ்ணன், ஐஎன்டியூசி மனோகரன், சாமுவேல், மனுவேல் நெல்சன், சேகர், அகஸ்டின், செம்புலிங்கம் கோபால், கோபி, வாசிராஜன், தனுஷ், காசிராஜன், பெருமாள், மகிளா காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பேச்சியம்மாள், தனலட்சுமி, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயஜோதி, வசந்தி, மேலும் ஐஎன்டியூசி சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.