ராகுல்காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் - 4 வாரத்துக்குள் அறிக்கை கேட்கிறது நீதிமன்றம்
Cong News
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் நான்கு வாரங்களுக்குள் முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கர்நாடக மாநில பாஜக உறுப்பினர் எஸ். விக்னேஷ் ஷிஷிர் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
மனுதாரர், ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதால், அவரது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு இதுவரை இந்த விவகாரத்தில் பதிலளிக்காததால், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
nadunilai.com