கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் - கதறிய சவுக்கு சங்கர்

saukku sankar

கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் - கதறிய சவுக்கு சங்கர்

யுடியூப் மூலம் தமிழக அரசியல் குறித்து விவாதித்து வருபவர் சவுக்கு சங்கர். எதிலும் அதிரடி காட்டும் சங்கர், தமிழக காவல்துறை அதிகாரி மற்றும் பெண் காவலர்கள் குறித்து பேசிய பேச்சு விமர்சிக்கபட்டது. மேலும் அந்த விவகாரம் குறித்த வழக்கில் சங்கர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரது கார் மற்றும் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக மேலும் வழக்கு பதியபட்டது. அத்துடன் பழைய வழக்குகள் சிலவற்றை தூசு தட்டிய காவல்துறை அதற்கு உயிர் கொடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவறுகளை சுட்டி காட்டுபவர், சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்பதை வைத்து அவர் காரில் கஞ்சா வைத்திருந்தார், வீட்டில் கஞ்சா வைத்திருந்தார் என்று வழக்கு பதிவு செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கின்றனர். 

இந்தநிலையில் சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது அவர், கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன், சிறை கண்காணிப்பு அதிகாரி செந்தில்குமார்தான் என் கையை உடைத்தது என்று சப்தம் போட்டார். அவரை போலீசார் அங்கிருந்து வேகமாக அழைத்து சென்றுவிட்டனர்.