தூத்துக்குடி, சாயர்புரம், ஏரல், திருவைகுண்டம் இடையே நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பஸ் மறியல் போராட்டம்

TNSTC NEWS

தூத்துக்குடி, சாயர்புரம், ஏரல், திருவைகுண்டம் இடையே நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பஸ் மறியல் போராட்டம்

தூத்துக்குடி, சாயர்புரம், ஏரல், திருவைகுண்டம் இடையே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி பஸ் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக சேர்வைகாரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து ஊராட்சி மன்ற துணைத்தலைர் ஜெனிட்டா, வார்டு உறுப்பினர்கள் குணபாலன்,கோபி ஆகியோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாவது :         

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதி மற்றும் இருவப்பபுரம் சாலை வழியாக தூத்துக்குடி மற்றும் திருவைகுண்டம் அரசு பணிமனைகளை சேர்ந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளின் தடம் எண்கள் கடந்த 3வருடங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு புதிய எண்களுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படும் பேருந்துகளும் அடிக்கடி வழித்தடங்களை மாற்றி சம்பந்தமில்லாத வழித்தடங்களில் இயக்கப்படுவது மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் எங்கள் ஊர் வழியாக இயக்கப்படும் தடம் எண் 52பி என்கிற பேருந்து வழித்தட பெயர் ஒழுங்கில்லாமல் இயக்கப்படுகிறது. அதுவும் 7தடவை சென்றுவரும் இப்பேருந்து 3தடவை மட்டுமே இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் வேறு வழித்தடங்களுக்கு மாற்றிவிடப்படுகிறது. எதிர்காலத்திலும் இப்படி இயக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் பலனில்லை. 

அதுபோல் 52 ஏ, 52 எப் போன்ற பேருந்துகளின் பக்கவாட்டில்  சேர்வைக்காரன்மடம் என்கிற வழித்தடம் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை என்பதால் பொதுமக்கள் மிகுந்த குழப்பமடைகின்றனர். அதுபோல் திருவைகுண்டம் பணிமனையை சேர்ந்த தடம் எண் 578 என்கிற பேருந்து தூத்துக்குடியில் காலை 9.45 மணி மற்றும் மாலை 5.45 மணி, திருவைகுண்டத்தில் மாலை 4.00 எடுக்க வேண்டிய தடவைகள் இயக்கப்படவில்லை. திருவைகுண்டத்தில் காலை 8.25 மணிக்கு கிளம்பும் இந்த பேருந்து தூத்துக்குடி சென்று அங்கிருந்து எங்கோ போய்விடுகிறது. எனவே திருவைகுண்டத்தில் காலை 7.55 மணிக்கு எடுத்து தூத்துக்குடியிஒல் 9.45மணி மற்றும் மாலை 5.45 மணியில் இயக்க வேண்டும். அதுபோல் 147 ஏ மற்றும் 147 டி பேருந்துகள் சரிவர இயக்கப்படுவதில்லை. அதேபோல் எங்கள் ஊர் வழியாக செல்லும் தனியார பேருந்துகள் காலை, இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. அனைத்து பேருந்துகளையும் இயங்கவேண்டும். 

நாங்கள் கோரிக்கை வைத்து வரும் தடம் எண் : 153 எக்ஸ் எஸ் 1 (திருவைகுண்டம் - மதுரை அல்லது திருச்சி), தடம் எண் : 145 எஸ் எஸ் எஸ் (உவரி - ஏரல் - சாயர்புரம் - தூத்துக்குடி) ஆகிய பேருந்துகளை இயக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஊராட்சி மக்கள் சார்பாக மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் வரும் திங்கள் தினத்தன்று கோரிக்கை மனு அளிப்போம். அதன் பிறகும் தாமதமாகும் பட்சத்தில் பள்ளி மாணவ மாணவியர், ஊர்பொதுமக்கள் சார்பாக பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும் என வார்டு உறுப்பினர்கள் மற்றும் உபதலைவர் தெரிவித்துள்ளனர்.