கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
Bjp News

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட முடிவின்படி தமிழகம் முழுவதும் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும் , தமிழக அரசை கண்டித்தும் இன்று 22ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று மாலை 5 மனிக்கு V.V.D சிக்னல் அருகில் வைத்து மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் R. சித்ராங்கதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர்சிவந்தி நாராயணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேற்படி நிகழ்ச்சிக்கு பொதுச் செயலாளர்கள் ராஜா சிவமுருகஆதித்தன் உமரிசத்தியசீலன் துணைத் தலைவர்கள் சிவராமன் செல்வராஜ் வாரியார் சுவைதார் தங்கம் சரஸ்வதி ரேவதி மாவட்டச் செயலாளர்கள் வீரமணி கனல் ஆறுமுகம் சங்கர் அர்ஜீன் பாலாஜி ராஜபுனிதா ஆண்டாள் பாப்பா ராமக்கனி பொருளாளர் சண்முகசுந்தரம் OBC அணி மாநிலதுனைதலைவர் விவேகம் ரமேஷ் இளைஞரணி மாநில செயலாலர் பூபதிபாண்டியன் இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மகளிர்அணி மாவட்ட தலைவர் தேன்மொழி மண்டல் தலைவர்கள் மாதவன் ராஜேஷ் கனி சிவ கணேசன் சிவராமன் அழகேசன் ராமகிருஷ்ண குமார் நவமணிகண்டன் ஆறுமுகச்செல்வன் முருகேச பாண்டியன் குமரேசன் சரவணன் முத்து குட்டிநம்பி துரை மணிகண்டன் ராஜகோபால் ஆர்ப்பாட்டத்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.