இந்தியாவில் கோடீஸ்வரர்கள் வேகமாக உருவாகுகிறார்கள், இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்கிறது
INDIAN GDP
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான் என்றார் நம்முடைய அவ்வைபாட்டி. ஒரு ஊரில் செல்வந்தர்கள் அதிகம் இருப்பதை பொருத்து சகல வசதிகளும் எளிதில் கிடைக்கிறது. அதுபோல் ஒரு நாட்டில் செல்வந்தர்கள் அதிகம் இருக்கும்போது தொழில் வளம் பெருகிறது. தொழில் மூலம்தான் செல்வம் கிடைக்கிறது என்றாலும் அந்த தொழிலை உருவாக்குவதற்கு செல்வம் அவசியம் இருக்கிறது. அந்த வகையில் நாட்டில் தொழில் வளம் பெருக, தேவையான கட்டமைப்பு அவசியம் உள்ளது. அந்த கட்டமைப்பை உருவாக்க செல்வந்தர்கள் அவசியம் ஏற்படுகிறது. அந்த செல்வந்தர்கள் அதிகம் உள்ள நாடு பணக்காரர்கள் நாடு என்று வர்ணிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் நம்முடைய இந்திய நாட்டிலும் கோடீஸ்வர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நல்ல விசயமாகும். இதன் மூலம் பெரிய அளவில் தொழில்வளம் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மும்மையைச் சேர்ந்த ஹூருன் என்கிற நிறுவனம் 2024ம் ஆண்டுக்கான கோடீஸ்வரர்கள் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. கடந்த 2020ல் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியை முந்தினார். அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.11.61 லட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். அதானியின் சொத்து கடந்த ஓராண்டில் 95 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஹிண்டன் பர்க் அறிக்கையால் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு அவரது சொத்து கடந்த ஒரு வருடத்தில் வேகமாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டைவிட 95 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு ரூ.1,021,600 கோடி சொத்து குவிந்துள்ளது. இந்தியாவின் நம்பர் 2 பணக்காரர் என்ற இடத்தில் ரூ.10.14 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி உள்ளார். 3.14 லட்சம் கோடி மதிப்புடன் மூன்றாவது இடத்தில் ஹெச் எல் நிறுவனர் ஷிவ்நாடார், 4வது இடத்தில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தலைவர் சைரஸ் பூனவாலா, 5வது இடத்தில் சன் பார்மா சூட்டிகல் நிறுவனத்தின் திலீப் ஷங்வி உள்ளனர். நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 334 என்ற சாதனையை எட்டியுள்ளது. நமது நாடு ஆசியாவிலேயே கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடாக உயர்ந்துள்ளது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் சீனா 25% சரிவைக் கண்டபோதும், இந்தியா 29% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒரு கோடீஸ்வரரை இந்தியா உருவாக்கியது. 2023ல் நமது நாட்டில் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அதேபோல் இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியல் அடிகரித்துள்ளது. 1,500 க்கும் மேற்பட்ட தனிநபர்களின் நிகர சொத்துமதிப்பு ரூ.1,000 கோடி அல்லது அதற்கு மேல் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இது 150 % வளர்ச்சியைக் காட்டுகிறது.
இந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 1539 ஆக உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த பட்டியலில் 220 பேர் சேர்ந்துள்ளனர். இளைய கோடீஸ்வரர் பட்டியலில் செப்டோகைவல்யா வோரா(22) ஆகியோர் ரூ.41 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
இந்திய பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, கிட்தட்ட 159 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதன் மதிப்பு, சவுதி அரேபியா, சுவிசர்லாந்து ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த ஜி.டி.பியை விட அதிகமாகும். இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பில் இது பாதியை தாண்டுகிறது.
ஆக அவ்வைபாட்டி சொன்னது போல் நாட்டில் பணக்காரர்களின் வளர்ச்சி, அதன் தொடர்ச்சி நாட்டின் வளர்ச்சி ஆகியவை நடந்து வருகிறது.