உடல்தகுதியை பேணுவதற்காக விழிப்புணர்வு சைக்கிள் போட்டி - தூத்துக்குடியில் நடந்தது
Thoothukidi collector

தூத்துக்குடியில் அனைவரும் உடல்தகுதியை பேணுவதற்காக விழிப்புணர்வு பெறவேண்டும் என்கிற நோக்கத்தில் விழிப்புணர்வு சைக்கிள் போட்டி.நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்தும் விதமாக மாணவ/மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் போட்டி இன்று 4.01.2025 நடத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் இருந்து சைக்கிள் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.