ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் - வரும் 10ம் தேதி தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது

Ration Card

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் - வரும் 10ம் தேதி தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வரும் சனிக்கிழமை(10.08.2024) சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :  பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, அந்தந்த தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்றவைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.