நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கால்பந்து போட்டிகளுக்கான ஆயத்தம்

Nazareth news

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கால்பந்து போட்டிகளுக்கான ஆயத்தம்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். 

உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், மாவட்ட கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடிய அணிகளின் விபரம், போட்டிகள் நடைபெற இருக்கின்ற மைதானங்களில் செய்யப்படவேண்டிய  ஏற்பாடுகள், போட்டிகளுக்கான நடுவர்கள் நியமனம், முதல் உதவி சிகிச்சை மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசித்தார். உடற்கல்வி ஆசிரியர்களின் சார்பில் தலைமை ஆசிரியர் குணசீலராஜ்க்கு  பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ப்ரூமல் பொன்னாடை அணிவித்தார். என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர், தேசிய மாணவர் படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரணர் இயக்க தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறினார். தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கால்டுவெல் ஜெபசிங் மற்றும் சாலைப்புதூர் ஏக ரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சாத்ராக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். மாவட்ட கால்பந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சுதாகர் தலைமையில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் வழிகாட்டுதலின்படி, மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், பிற  ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.