நாகர்கோவில் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மாட்டுப்பொங்கல்
Pongal News
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக, மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் ஷோபா தலைமையில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர் .காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாடுகளுக்கு திலகமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், பாண்டிய சிலம்ப அகடமி, ஆசான் தங்கபாண்டியன் தலைமையில், கிராமிய மற்றும் சிலம்பக் கலைக்குழு, கிராமிய சிலம்பாட்டம் ,வீர விளையாட்டுக்கள், நடனங்கள் போன்ற வீர சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர். மறைந்து வரும் சிவகங்கை மருதுபாண்டி சகோதரர்களின், தமிழர் வீர விளையாட்டான, வளறி தற்காப்பு விளையாட்டும் நடைபெற்றன. இதில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, தமிழ்நாடு நடசாரி சிலம்பாட்ட கழக தலைவர் ஜே. அர்னால்டு அரசு, பைரவி அறக்கட்டளை ஷோபா ஆகியோருக்கு தமிழர்களின் தற்காப்பு வளறி ஆயுதங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஐயப்பா மகளீர் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவிகள்,முன்னாள் கால்நடைத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, அறக்கட்டளை நிர்வாகிகள், மேட்பர்வையாளர்கள்,அட்வொகேட்ஸ் கீரெஷாபிரசாத், சஞ்சய், வடக்கன்குளம் கருணை இல்லம் நிர்வாகிகள், மரியாச்செல்வமணி,தாமஸ், மைக்கேல் ஜார்ஜ், கண்மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.