திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காது வரி உயர்வு - திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் போராட்டம்
Admk News
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் ஆகிவற்றை திரும்பப் பெற வலியுருத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தபட்டுள்ளது.
தமிழகத்தில் 40 மாத திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் ஆகியவை கட்டுக்கடங்காது உயர்த்தப்பட்டுள்ளதால் அதனை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவது மனித சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும் என்று அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. அதுபோல் தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் குரூஸ்பர்னாந்து சிலை முன்பிருந்து சத்திரம் பஸ் ஸ்டாப் வரை அதிமுகவினர் மனித சங்கிலியாக அணிவகுத்து சென்றனர். அப்போது அவர்கள் திமுக அரசிற்கு எதிராக, கட்டுக்கடங்காத வரி உயர்வை திரும்பப் பெறு என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆறுமுக நயினார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுற வங்கி தலைவர் இரா. சுதாகர் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரார் வக்கீல் மைக்கல் ஸ்டனிஸ் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், சிறுமாண்மை பிரிவு கே.ஜே. பிரபாகர், இளைஞர் பாசறை தனராஜ், பகுதி கழக செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், நட்டர் முத்து, தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, பகுதி துணைச் செயலாளர் சென்பகசெல்வன், மண்டல ஐடி விங் இணைச் செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர் சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், ராஜ்குமார், குமாரவேல், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லட்சுமணன், நவ்சாத், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், ஏகே மைதின் வர்த்தக அணி சுகுமார் , வெங்கடேஷ், சொக்கலிங்கம், ரயில்வே மாரியப்பன், நாகூர் பிச்சை, இம்ரான், மகளிர் அணி நிர்வாகிகள் மெஜிலா, சாந்தி, சண்முகதாய், இராஜேஸ்வரி, இந்திரா, அன்னபாக்கியம், ஷாலினி, சரோஜா, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, சந்தனபட்டு, பொன்ராஜ், டேவிட் ஏசவடியான் வட்ட செயலாளர்கள் ஜனார்தனன், கொம்பையா, ராமசந்திரன், சுயம்பு, சங்கர், ரகுநாதன், ரங்கன், உதயசூரியன், முத்துக்குமார், மனோகர், அருண்ராஜா, மணிவண்ணன், ஜெயக்குமார், அந்தோணிராஜ், ஈஸ்வரன், உலகநாதபெருமாள், செல்வராஜ், எஸ்.கே.மாரியப்பன், யோவான், ஹார்பர் பாண்டி, ஆனந்த், பாலஜெயம், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, பண்டாரவிளை பாஸ்கர், கோபால், சரவணவேல், சிவமாடசாமி, வேல்சாமி, சுப்புநாராயணன், சாம்ராஜ், சகாயராஜா, தீனா வசந்த் வினோத் யூவன்பாலா, உதயா, உட்பட பலர் கைகோர்த்து நின்று கோஷம் எழுப்பினர்.