தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் கூலித் தொழிலாளி கொலை - போலீஸ் விசாரணை
Murder News
தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ்(45). இவரது மனைவி குலையன்கரிசல் ஊரை சேர்ந்தவர். இவர்களுக்கு 4 குழந்தைகள். ஞானப்பிரகாஷ் (45). கூலித் தொழிலாளியான இவர் தற்போது குடும்பத்துடன் கூட்டாம்புளி பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவரது வீட்டின் அருகே தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஞானப்பிரகாஷ் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனை இன்று காலை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர், புதுக்கோட்டை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஞானப்பிரகாஷின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .
இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா? அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் டைல்ஸ் கல்லால் தாக்கியதில் ஞானப்பிரகாஷ் உயிரிழந்தாரா? காதல் பிரச்னை எதாவது உண்டா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த கிரிக்கெட் பேட்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ள போலீசார் முள்ளக்காடு பகுதியில் 2 வாலிபர்களை பிடித்து இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
nadunilai.com