மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டங்கள் ஏன்?
Delhi News
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதாக கட்சி என்கிற அமைப்பை சேர்ந்த அபிஜித் தீப்கே தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே பெரிய அடிதடி கலவரம் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும் காலத்தில் இப்போராட்டங்கள் நடைபெறுவதால் இது அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்படும்போது இதுபோன்று எதாவது அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக இருப்பதை பார்க்க முடிகிறது.
ஆரம்பத்தில் அபிஜித் தீப்கே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து செயல்பட்டார். அதிலிருந்து விலகி அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு மேற்படிப்பிற்கு சென்றதாக சொல்கிறார்கள். அங்கிருந்தபடியே இந்தியாவில் உள்ள சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த அமைப்பை உருவாக்கினார். இணையதளம் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்ற அமைப்பிற்கு ஏக போக ஆதரவு பெருகியதை தொடர்ந்து அவர் இந்தியா வந்தார். டெல்லியில் நீட் விவகாரத்தை மையமாக வைத்து போராட்டத்தை துவங்கினார்.
இளைஞர்களை ஒன்றிணைத்தார். நீட் தேர்வு விவகாரத்தை மையமாக வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சோனம் வான்சுக்கும், அபிஜித் தீப்கே கோரிக்கை போராட்டங்களும் இணைந்தது. வன்முறையில் போலீசாரும், போராட்ட காரர்களும் காயமடைந்தனர். நீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இவர்கள் வைக்கும் கோரிக்கையில் ஒன்று மத்திய கல்வி அமைச்சரும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதாகும். நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இதுக்கிடையில் இவர்களின் போராட்டங்களில் உள்நோக்கம் இருக்கிறது. எப்போதும் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சில அந்நிய சக்திகள் இவர்களோடு கை கோர்த்துள்ளனர். அது தெரியாமல் மற்ற மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது அவர்களுக்கு என்னதான் கோபம் என்று ஆராய்ந்து பார்த்தால் மேலோட்டமாக நீட் விவகாரம் சொல்லப்படும். ஆனால் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் நாட்களில் மூன்று முன்னெடுப்புகளை முன்வைத்து வந்திருக்கிறார். அதாவது முதலாவதாக தேசிய தேர்வு முகமையில் தொழில்நுட்ப நீதியாக சீரமைப்பது. 2வது சிபிஎஸ்இ கல்வி முறையில் உள்ளூர் மொழியை கட்டாயமாக்குவது, மூன்றாவது, என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருக்கும் காலனித்துவ அடையாளங்களை அகற்றி, இந்தியத்தன்மைக்கு மாற்றுவது.
இந்த மூன்று மாற்றங்களும் இந்தியாவில் இதுநாள் வரை நடந்துவரும் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான, ஆங்கில வழி பயிற்சி மையவர்த்தகத்தை பாதிக்கும். அதனால் வருமானம் பார்த்த பன்னட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு வரும் என்பதால் இந்த சீர்திருத்தங்களை தடுக்க, தர்மேந்திர பிரதான் குறிவைக்கப்படுகிறார் என்கிறார்கள்.
இப்படியான சூழலில், இந்த சர்வதேச சதிவலைகள் எதுவும் தெரியாமல் நம்முடைய மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகளின் அழைப்பை ஏற்று விட்டில் பூச்சிகளாய் பாழாகின்றனர். நேபாளம் எரிந்தால், வங்கதேசம் எரிந்தால், இலங்கை கொதித்தால் அது இந்தியாவிலும் நடக்க வேண்டுமா?. அந்த நாடுகளில், இளைஞர் போராட்டங்களுக்கு பிறகு அந்த நாடுகளின் இன்றைய நிலை என்ன?. அந்த நிலை இந்தியாவுக்கு தேவையா?. என்று இளைஞர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
நம் நாட்டில் போராட, கருத்துக்களை தெரிவிக்க இங்கே அமைதியான முறையில் ஏராளமான வழிகள் இருக்கின்றன. மாற்றம் வேண்டுமெனில் ஓட்டு என்ற வலிமை மிக்க ஆயுதம் நம்மிடம் இருக்கிறது. அதன் மூலம் உண்டாகும் மாற்றம்தான் ஜனநாயக பூர்வமானதாக இருக்குமே தவிர, வன்முறை போராட்டங்கள் ஒரு போதும் தீர்வாகாது என்பதை இளைஞர்கள், மாணவர்கள் புரிந்து கொண்டு, தேசவிரோத சக்திகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
nadunilai.com