தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ் அருகே பாலம் வேலை விறுவிறுப்பாக நடக்கிறது

N.H.News

தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ் அருகே பாலம் வேலை விறுவிறுப்பாக நடக்கிறது

போக்குவரத்து வசதிகளே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதை கருத்தில் கொண்டு மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சாலை விரிவாக்கம் செய்தல், மேம்பாலங்கள் அமைத்தல் என நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கோரம்பள்ளம், புதுக்கோட்டை மங்களகிரி, வாகைகுளம், முறப்பநாடு உள்ளிட்ட பல இடங்களில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பாலத்திற்கு இருபுறமும் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் அளவில் உள்ள நிலையில் மத்திய பகுதியில் தூண்கள் மீது பொருட்களை வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

எனவே மிக விரைவில் இந்த சாலை பணிகள் நடைபெற்று நிறைவு பெறும் என்று தெரிகிறது. இந்த பணிகளுக்காக அவ்வப்போது வாகனங்களை மாற்றிவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.