தூத்துக்குடியில் தனியார் பேருந்து - பைக் மோதிய விபத்தில் என்.சி.சி.அலுவலர் பலி
Accident
கேரளமாநிலம், மலப்புரம் மாவட்டம், திருவாலி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(31). என்.சி.சி யில் கடற்படை பிரிவு அலுவலராக இருந்தார். இவர் மனைவி, குழந்தையுடன் தூத்துக்குடி பின் என் டி காலனியில் குடியிருந்து வந்தார். இன்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றபின் விஷ்ணு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மில்லர்புரம் பகுதியை கடந்து சென்றபோது இவரது பைக்கும், முந்த முயன்ற தனியார் பணியாளர் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்துக்குள் சிக்கிய விஷ்ணு, சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த தென்பாகம் போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் மில்லர்புரம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.