அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரிய செந்தில்பாலாஜி மனு - நிராகரித்தது உயர்நீதிமன்றம்

high court

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரிய செந்தில்பாலாஜி மனு -  நிராகரித்தது உயர்நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது சிறையில் இருக்கிறார். இதுக்கிடையே அவர் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை செய்ய முயற்சி செய்து வருகிறது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. 

மனுவில், மோசடி வழக்கை மாநில போலீசார் விசாரித்து வருவதற்கு இடையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியாதுஎன்று வாதிட்டனர். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. எனவே மனுதாரரான செந்தில்பாலாஜி கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மேலும் செந்தில்பாலாஜி முறையிடலுக்கு அடுத்தமாதம் 25ம் தேதிக்குள் பதில் வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.