தூத்துக்குடியில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi stalin
தென்மாவட்டங்களான தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மற்றும் தென் காசி மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து சேதமாக்கியதை தொடர்ந்து அரசு நிர்வாகங்களும், தன்னார்வலர்களும் பாத்க்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதி பெய்த கன மழை பெருத்த பாதிப்பை உருவாக்கியது. எதிர்பாரா வகையில் அதிக அளவில் மழை பெய்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல, அரசு நிர்வாகமே அதிர்ந்து போனது என்பது 100 சதவீதம் உண்மை. தகவல் அறிந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து வேண்டியதை வழங்குவதில் அரசியல் கட்சிகளுக்குள் போட்டி நிலவி வருகிறது. மழை குறித்த தகவல் வந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனே அங்கு ஆஜர் ஆனார். மத்திய குழு, மாநில அமைச்சர்கள், மாநில,மாவட்ட அதிகாரிகள் என்று பல மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியை வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே அமைச்சர் உதயநிதி மத்தியரசு நிதி ஒதுக்குவது குறித்து பேசும்போது அவங்க அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை. மக்கள் வரிப்பணத்தத்தைதானே கேட்கிறோம்’ என்று பேசிவிட, அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த பணம் யாரோட அப்பன் வீட்டு பணமும் . அது அரசு பணம். இது போன்று அப்பன், ஆத்தா என்று பேசுவது வளர நினைக்கும் அரசியல்வாதிக்கு நல்லது அல்ல’ என்று பேசினார். இதனால் அரசியல் விவாதங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழக வெள்ளத்தை பார்வையிட கிளம்பினார்.
இதுக்கிடையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வெள்ள நிலவரங்களை ஆய்வு செய்ய கிளம்பியிருக்கிறார். இன்று தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை தந்துள்ள அவர், முறப்பநாடு பகுதியில் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, அனிதாராதாகிருஷ்ணன், மூர்த்தி, கலெக்டர் லட்சுமிபதி, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.