இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான கிறிஸ்டோபர் ஜாபர்லோவோடு ஒரே மேடையில் ராகுல்

Rahul Gandhi - Christopher jabarlo

இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான கிறிஸ்டோபர் ஜாபர்லோவோடு ஒரே மேடையில் ராகுல்

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக எழுதி வரும் எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஜாபர்லோ உடன், ஒரே மேடையில் அமர்ந்து கலந்துரையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பிரான்ஸ் நாடை சேட்ந்த எழுத்தாளரும், கட்டுரையாளருமான கிறிஸ்டோப் ஜாபர்லோ, ராகுலுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார். அவருடன் ராகுல் கலந்துரையாடினார். இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. 

காரணம்,பிரெஞ்ச் எழுத்தாளர் கிறிஸ்டோப், இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவர் எழுதிய, மோடிஸ் இந்தியா: ஹிந்து நேஷனலிசம் அண்ட் தி ரைஸ் ஆப் எத்தனிக் டெமாக்ரசி’ என்ற புத்தகத்தில், பிரதமர் நரேந்திரமோடி இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் அமர்ந்தது குறித்து அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தார். 

பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை வசதியாக மறந்துவிட்டு, பாஜ ஆட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்கு ஹிந்துக்களின் மத உணர்வே முழு காரணம் என்றும் ஹிந்துக்களை குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும் அவர் வெளிப்படுத்தி உள்ள பல்வேறு கருத்துக்களும், அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. அவை இந்தியாவில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் இந்தியா குறித்தும், ஹிந்துக்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் ராகுல், இந்தமுறை, இந்தியாவுக்கு எதிரான நபருடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டது இந்தியர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கிறிஸ்டோப் ஜாபர்லோ பார்வையில் இந்தியா! 

இந்தியா குறித்து, கிறிஸ்டோப் ஜாபர்லோ எழுதிய பிற புத்தங்களில் சில..

ஹிந்து நேஷனலிசம் இன் இந்தியா, டாக்டர் அம்பேத்கர் - லீடர் இன்டச்சபிள், தி பிஜேபி அண்டு தி கம்பள்ஷன்ஸ் இன் இந்தியா, இண்டியாஸ் சைலன்ட் ரெவல்யூஷன்: தி ரைஸ் ஆப் லோயர் காஸ்டஸ் இன் நார்த் இண்டியா, சங் பரிவார் : எ ரீடர், ஹிந்து நேஷனலிசம் : எ ரீடர், இண்டியா சின் 1950 : சொசைட்டி, பாலிடிக்ஸ், எகானமி அண்ட் கல்ச்சர், முஸ்லிம்ஸ் இன் இண்டியன் சிட்டிஸ் : டிராஜெக்டரீஸ் ஆப் மார்ஜினலைசேஷன், ரிலீஜியன்,காஸ்ட் அண்டு பாலிடிக்ஸ் இன் இண்டியா : நரேந்திர மோடி அண்டு ஹிஸ் எக்ஸ் பிரிமென்ட் வித் குஜராத், மேஜாரிடேரியன் ஸ்டேட் : ஹவ் ஹிந்து நேஷனலிசம் இஸ் சேஞ்ஜிங் இண்டியா, பிசினஸ் அண்டு பாலிடிக்ஸ் இன் இண்டியா

இப்படி இந்தியா குறித்து பல்வேறு புத்தகங்களை அவர் எழுதிக் குவித்துள்ளார். அதில் நம் நாடு குறித்தும், இந்திய மக்கள் குறித்தும் மிக மோசமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவருடன்தான் ராகுல் உரையாடியிருக்கிறார்.