ஸ்டெர்லைட்டின் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்.!

sterlite news

ஸ்டெர்லைட்டின் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்.!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சாய்ராம் டிரஸ்ட் இணைந்து நடத்திய திறன் மேம்பாட்டு பயிற்சியை முடித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம்  கல்வி, சுகாதாரம், மருத்துவம்,கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சமுதாய வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கடலோர பகுதியை சார்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது. சாய்ராம் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனத்தோடு இணைந்து ஸ்டெர்லைட் நிறுவனம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு புதுடெல்லியில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக போர்க் லிப்ட் ஆப்ரேட்டர், எலக்ட்ரீசியன் ஆகிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்தது. பயிற்சி 45நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சியில் பங்கெடுத்துக் கொண்டு பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு புதுடெல்லியில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழா ஸ்டெர்லைட் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சாய்ராம் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் வைர முருகேசன், நிர்வாக மேலாளர் அருணா, ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் உற்பத்தி பிரிவு தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் ஏ.சுமதி கலந்துகொண்டு பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர், ’’பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்த துறையிலேயே வேலை வாய்ப்பு பெற வேண்டும். வேலைவாய்ப்பை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தருகிறோம். நீங்கள் முதலில் வேலையில் சேரும்போது குறைந்த வருவாய் கிடைத்தாலும் அதன் மூலமாக உங்களது திறமை மேலும் வலுவடையும். திறமை அதிகரிக்க அதிகரிக்க உங்களது வருமானம் அதிகரிக்கும். எனவே பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் இந்த துறையில் வேலை வாய்ப்பு பெற்று பயனடையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்ற இங்குள்ள இளைஞர்கள் விரும்புவதாக நான் அறிந்தேன்.

நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும்போது பயிற்சி பெற்ற இளைஞர்கள் ஸ்டெர்லைட் ஆலையிலேயே வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும்’’ என்று கூறினார்.