தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் 77 வது குடியரசு தின விழா - நாம் இந்தியர் கட்சி சார்பில் கொண்டாட்டம்

Naam Indiyar

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் 77 வது குடியரசு தின விழா - நாம் இந்தியர் கட்சி சார்பில் கொண்டாட்டம்

நாம் இந்தியர் கட்சி சார்பில் 77 வது குடியரசு தின விழா புதுக்கோட்டை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் அருகில் தேசிய கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நாம் இந்தியர் கட்சியின் மாநில பொருளாளர் பேரூரணி து.ஜெயகணேஷ் தலைமை வகித்தார். 

இந்நிகழ்வில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை, தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் தங்கத்துரை, நல்லாசிரியர் பன்னீர்செல்வம்,  மாநில தொழிற்சங்க செயலாளர் சரவணக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர் , அருள்ராஜ், பவுல்ராஜ், பிரின்ஸ் ராஜா மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.