தூத்துக்குடி வி.இ.ரோடு டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் - ஆட்சியரிடம் எம்.எல்.ஏ ஸ்ரீநாத் கோரிக்கை
SRINATH MLA
தூத்துக்குடி தொகுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீநாத், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அரசு நிர்வாக நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடியில் மத்திய அரசின் பங்களிப்போடு ரூ.136.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
மேலும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டும் வருகிறது. மூடப்படாமல் உள்ள கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி வி.இ.ரோட்டில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றும் பொருட்டு எம்.எல்.ஏ ஸ்ரீநாத், அது குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷுமகாஜனிடம் கொடுத்தார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்று விதிகளுக்கு புறம்பாக உள்ள கட்சிகள் விரைவில் மூடப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் பதற்றத்தில் உள்ள பொதுமக்கள் மூடும் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று அரசு நிர்வாகத்தை கேட்டுக் கொள்கின்றனர்.
nadunilai.com