புதுக்கோட்டையில் இரு பைக் மோதி விபத்து : ஹோட்டல் அதிபர் உட்பட இருவர் பலி

accident

புதுக்கோட்டையில் இரு பைக் மோதி விபத்து : ஹோட்டல் அதிபர் உட்பட இருவர் பலி

புதுக்கோட்டையில் இருசக்கர வாகன விபத்தில் ஹோட்டல் அதிபர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40) இவர், புதுக்கோட்டை அருகே மங்களகிரி விலக்கு பகுதியில் உள்ள செல்வம் ஹோட்டல் உரிமையாளர். மாரமங்கலம், வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி (60). நேற்று மதியம் சுரேஷ்குமார் கடையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி பைக்கில் சென்றார். அப்போது புதுக்கோட்டையில் பொருட்களை வாங்கி கொண்டு பொட்டலூரணியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு பைக்கில் சென்ற வீரமணியின் பைக்கும்,  சுரேஷ்குமாரின் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ்குமாரும், வீரமணியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.