உலகின் 4வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா – ஜப்பானை பின்னுக்கு தள்ளி வரலாற்றுச் சாதனை

India

உலகின் 4வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா – ஜப்பானை பின்னுக்கு தள்ளி வரலாற்றுச் சாதனை

உலக பொருளாதார வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. ஜப்பானை பின்னுக்கு தள்ளி, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச பொருளாதார வல்லரசுகள் பட்டியலில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தாம் இடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, ஐந்தாவது இடத்தை இந்தியா கைப்பற்றியது. அதன் பின்னர், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உலகின் முதல் நான்கு பொருளாதார வல்லரசுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியா ஒரு படி முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதன் விளைவாக, ஜப்பான் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி – எண்களால் ஒரு பார்வை

தற்போதைய நிலையில்,இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 375 லட்சத்து 52 ஆயிரத்து 472 கோடி ரூபாய்) 2025–26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.2%, முதல் காலாண்டில் 7.8% வளர்ச்சி இதன் மூலம், வளர்ச்சியின் வேகம் குறையாமல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது.

இந்த வலுவான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்நாட்டு நுகர்வு (Domestic Consumption) குறிப்பிடப்படுகிறது. இந்திய மக்கள் அதிகமாக செலவழிப்பதும், சந்தையில் தேவை அதிகரிப்பதும் தொழில் துறைகளுக்கு வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது.

2030க்குள் மூன்றாவது இடம் – இந்தியாவின் அடுத்த இலக்கு பத்திரிகை தகவல் பணியகம் (PIB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2030ம் ஆண்டுக்குள் இந்தியா ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது,இந்தியாவின் பொருளாதாரம் 7.3 டிரில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 65 லட்சத்து 48 ஆயிரத்து 157 கோடி ரூபாய்) என்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை முந்தியதின் முக்கியத்துவம் ஜப்பான் பல தசாப்தங்களாக ஆசியாவிலும், உலகளாவிய அளவிலும் ஒரு முக்கிய பொருளாதார வல்லரசாக இருந்து வந்த நாடு. ஆனால் சமீப ஆண்டுகளில்,மக்கள் தொகை குறைவு முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு தேவை மந்தம் போன்ற காரணங்களால் ஜப்பானின் பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது.

இதற்கு மாறாக, இளம் மக்கள் தொகை வலுவான உள்நாட்டு சந்தை தொழில்நுட்பம், உற்பத்தி, சேவைத் துறைகளில் வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்தை வேகமாக இயக்கி வருகின்றன. சாமானிய மக்களுக்கு என்ன பயன்? இந்தியாவின் பொருளாதாரம் 8.2% என்ற வேகத்தில் வளர்வது, சந்தையில் தேவை அதிகரித்திருப்பதை காட்டுகிறது தொழிற்சாலைகள் முழு திறனுடன் இயங்கும் புதிய முதலீடுகள் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும் தனி நபர் நுகர்வு அதிகரிப்பதால், வர்த்தக நடவடிக்கைகள் பெருகி, அதன் இறுதி பலனாக வேலைவாய்ப்புகளும் வருமானமும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அரங்கில் இந்தியா – புதிய அடையாளம்

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்திருப்பது,சாதனை மட்டுமல்ல; எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான அடையாளம் ஆகும்.வேகமாக வளர்ந்து வரும் உலக பொருளாதாரங்களில் இந்தியா முதன்மையான இடத்தை பிடித்து வருவதோடு,இந்த வேகத்தை தொடர்ந்தால்,அடுத்த தசாப்தத்தில் உலக அரசியல் – பொருளாதார சமன்பாடுகளில் இந்தியாவின் பங்கு மேலும் வலுப்படும் என்பதில் ஐயமில்லை.