தூத்துக்குடி பிரஸ் கிளப் 2026 காலண்டர், டைரி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கல்

Press Club

தூத்துக்குடி பிரஸ் கிளப் 2026 காலண்டர், டைரி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கல்

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான டைரி மற்றும் காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சியும், புத்தாண்டை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம், பேனா, குங்குமசிமிழ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜீ, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ ஆலோசகர் அருண் உறுப்பினர்களுக்கு டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் வகையில் பிரஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்து செயல்பட வேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாகவும் நலமாகவும் அமைய வேண்டும்” என வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் மாரிராஜா, கண்ணன், முத்துராமன், ராஜன் உள்ளிட்டோரும், உறுப்பினர்கள் ரவி, அருள்ராஜ், கற்பகநாதன், பாலகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்களிடமும், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களிடமும், பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் 2026ஆம் ஆண்டிற்கான பிரஸ் கிளப் டைரி மற்றும் காலண்டரை வழங்கினர்.

இந்த சந்திப்பின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் அபிராமிநாதன், பகுதிச் செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், வட்ட செயலாளர் ரவீந்திரன், பெருமாள்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பத்திரிகையாளர்களின் பணியை பாராட்டிய அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி பிரஸ் கிளப் செயல்பாடுகள் தொடர்ந்து வலுப்பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.