டில்லியில் புதிய எம்.பி.,க்களுக்கு வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடு
Delhi
லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் புதிய எம்.பி.,க்களுக்கு பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் வரவேற்பு அளிக்கப்படும் என லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள், வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தேர்வாகும் எம்.பிக்களை வரவேற்கும் வகையில் பார்லி வளாகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே லோக்சபாவுக்கு தேர்வாகும் புதிய எம்.பிக்களை வரவேற்கும் வகையில் பார்லி இணைப்பு கட்டடத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தின் மாலை முதல் புதிய எம்.பிக்கள் பார்லி., வளாகத்திற்கு படையெடுக்க துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை வரவேற்க 9ம் தேதி வரை டில்லி ரயில், விமான நிலையங்களில் சிறப்பு குழுக்களை அமைத்து அவர்களுக்கு வழிகாட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய எம்.பிக்கள் அரசு குடியிருப்புகளை காலி செய்ய கால அவகாசம் வழங்கப்படும். எனவே புதிய எம்.பிக்கள் தங்க, மாநில அரசுகளின் இல்லங்களில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.