சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார்
Admk News

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு இன்று (22.01.2024) வருகை தந்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.