கடந்த ஆண்டு மழைக்கு சேதமான கொம்பன்குளம் இன்னும் சீரமைக்கப்படவில்லை.!

Sathai News

கடந்த ஆண்டு மழைக்கு சேதமான கொம்பன்குளம் இன்னும் சீரமைக்கப்படவில்லை.!

சாத்தான்குளம்  அருகே கொம்பன்குளம் சாந்தவாரிகுளம் கடந்த ஆண்டு கனமழைக்கு சேதமானதை சீரமைக்க  வேண்டும் என  விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளத்தில் சாந்தவாரிகுளம் இருக்கிறது. 98 ஏக்கர் பரபரப்பில் உள்ள இந்த குளத்தை நம்பி அதனை சுற்றியுள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த குளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழைக்கு குளத்தில் கரைகள் உடைந்து சேதமாகி அதில் உள்ள தண்ணீர் வெளியேறின. இதனால் விவசாயிகள் குளத்தில் சேதமான குளக்கரையை சீரமைத்து  தண்ணீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

தற்போது பெய்து வரும் மழைக்கு குளத்தில் தண்ணீர் தேங்காமல் வெளியேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். குளம் உடைப்பு சீரமைக்கப்படாமல் உள்ளதால்  இந்த  ஆண்டு குளத்தில் தண்ணீர் தேங்குவது பாதிக்கப்படும் எனவும், விவசாயமும் கேள்வி குறியாகும்  என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆதலால் அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு குளத்தின் கரையை சீரமைத்து குளத்தில்  தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என  வலியுறுத்தியுள்ளனர்.