நாசரேத் சாலமோன் பள்ளியில் பொங்கல் விழா
nazareth
நாசரேத், ஜன. 15:நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழா நிகழ்ச்சி தமிழத்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளி தலைவர் எலிசபெத் ஜெபம் செய்து விழாவை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் மாணவ, மாணவியர்களுக்கு தமிழர் திருநாள் பற்றியும், பொங்கல் திருநாள் சிறப்பினையும் முன்னோர்கள் வாழ்ந்த விதத்தினையும் எடுத்துரைத்தார்.நிர்வாகி பியூலா சாலமோன விழாவிற்கு தலைமை தாங்கி பொங்கல் பானையின் அடுப்பை பற்ற வைத்து துவக்கினார். மாணவ மாணவிகளுக்கு பொங்கல் திருநாள் பேச்சிப்போட்டி. நடனம், மாறுவேட போட்டி நடைபெற்றது. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் விழாவில் மாணவ மாணவியர்கள் நம் பாரம்பரிய உடையில் வந்து தாங்களே அனைத்துப் பொருட்களும் கொண்டு வந்து, அவர்களே பானைவைத்து பொங்கலோப் பொங்கல் எனப் பொங்கல் இட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் விழாவிற்கு வந்து இருந்த பெற்றோருக்கும் பொங்கல் வழங்கினர். மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் நடனம் ஆடினர். நிகழ்சியின் முடிவில் உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ் நன்றி கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் ஜோயல் ராஜ்குமார் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்து இருந்தனர்.