மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டெர்லை காப்பர் 1 கோடி ரூபாய் நிவாரண உதவி.!
sterlite
சென்னை, டிசம்பர் 16: ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், புயல் வெள்ளம் பாதித்த சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதுடன், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4000 பேர்களுக்கு இந்த நிவாரண உதவிகள் சென்று சேர்ந்துள்ளன.
மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டதோடு, பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உடனே களத்தில் இறங்கியது. சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டுவருவதில் ஈடுபாடு காட்டி வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதற்குத் தேவையான வசதிகளை ஒருங்கிணைத்தது.
கார்கில் நகர், திருவொற்றியூர், அத்திப்பட்டு புதுநகர் ஆகிய இடங்களில் தனித் தனி உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பகுதிகளில் தேவைப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிப் பொருட்கள் இரவு பகல் பாராமல் கொண்டு சேர்க்கப்பட்டன. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள், சுத்தமான குடிநீர், படுக்கை விரிப்புகள், சுகாதார பெட்டகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டன. மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுடைய உடனடி தேவைக்கேற்ப, இவை உரிய நேரத்தில் உரிய முறையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
மேற்கண்ட பகுதிகளில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நிவாரண முகாம்கள் மூலம், 4,000 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரண உதவிகள், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் போய்ச் சேருவதற்கான வழிவகை செய்யப்பட்டது. குறிப்பாக, குழந்தைகள், முதியோர், சிறப்புத் தேவையுடையோருக்கு, இந்த இடர்காலத்தில் தேவைப்படும் உதவிகள் கிடைக்குமாறு செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஏ. சுமதி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிய உதவிகள் போய்ச் சேர்வதில், இந்நிறுவனம் எவ்வளவு கவனத்தோடு இருக்கிறது என்பதை விளக்கினார். “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்டு மனம் கலங்குகிறது. இடர்கள் ஏற்படும் போதெல்லாம் தமிழ்நாட்டுடனும் தமிழர்களுடனும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் என்றும் துணை நிற்பதில் உறுதியாக இருக்கிறது. நாங்கள் வழங்கும் நிவாரணம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் உடனடி உதவியாகும். இதன் மூலம், அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக்கொள்ள முடியும்,”என்றார் ஏ.சுமதி.
மீட்பு நடவடிக்கையிலும் மறுவாழ்வு முயற்சிகளிலும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறது. உள்ளூர் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து உதவுவோம். ஸ்டெர்லைட் காப்பர் பற்றி: வேதாந்தா 30 பில்லியன் டாலர் வருவாயும், 10 பில்லியன் டாலர் லாபமும் ஈட்டக்கூடிய நிறுவனம் ஆகும். மேலும், எண்ணெய், எரிவாயும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஸ்ப்ளே கண்ணாடி, செமி கண்டக்டர்கள், சுரங்கம் மற்றும் உருக்கு ஆலைகளைப் புதிதாக உருவாக்குவதற்கு அடுத்த 4, 5 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
வேதாந்தா லிமிடெட்டின் ஒரு பிரிவான ‘ஸ்டெர்லைட் காப்பர்’, இந்தியாவில் தாமிர உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் ஆகும். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் தூத்துக்குடியிலும், யூனியன் பிரதேசமான தாத்ரா & ஹவேலி சில்வாஸாவிலும் ஆலைகள் உள்ளன. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஃபுஜைரா கோல்டும், கோவாவில் நிக்கில் தொழிலும் இதற்கு உண்டு. தாமிரத்தை உருக்குவதிலும் சுத்தகரிப்பதிலும் ஓராண்டில் 4 லட்சம் மெட்ரிக்டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், சல்பியூரிக் மற்றும் பாஸ்போரிக் அமிலத் ஆலைகள் உண்டு. தென் இந்தியாவில் உள்ள தூத்துக்குடியில் தாமிர ஆலையும் சுத்திகரிப்பு நிலையமும் உண்டு. மேற்கு இந்தியா சில்வாஸாவில் இரண்டு தாமிர வடம் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. ஃபுஜைரா கோல்டில், 1 லட்சம் மெட்ரிக்டன் திறன் கொண்ட தொடர் கேஸ்ட் ராடு ஆலை இயங்குகிறது. மேலும், ஆண்டு ஒன்றுக்கு 50 மெட்ரிக் டன் தங்க சுத்திரிப்பு ஆலையும் 120 மெட்ரிக்டன் வெள்ளி சுத்திரிகரிப்பு ஆலையும் இயங்கி வருகின்றன. கோவாவில் உள்ள நிக்கில் தொழிலில், ஓரண்டில் 7,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட நிக்கில் உலோகமும் சல்பேட் உற்பத்தியும் நடைபெறுகின்றன.