தூத்துக்குடியில் 43.92 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின்மாற்றிகள் - அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
Minister Geethajeevan
பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தூத்துக்குடி சிதம்பரநகர் பீச்ரோடு மற்றும் ஊரகம் வடக்கு தூத்துக்குடி மின்விநியோக பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளான பொன்சுப்பையாநகர், மினிசகாயபுரம், என்ஜிஓ காலணி, 1மற்றும் 2வது தெரு, கோக்கூர் ரோடு, பால்பாண்டிநகர் 4 மற்றும் 5வது தெரு, ராஜகோபால்நகர் 2 மற்றும் 4வது தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள 296 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 43.92 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய 63 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றிகள் அமைக்கபட்டது. அதன் துவக்க விழா இன்று(26.8.2023) நடைபெற்றது. இந்த விழாவிற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்மாற்றிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராம்குமார், வடக்கு உதவி செயற்பொறியாளர் பிரேம், தெற்கு உதவிசெயற்பொறியாளர் உமை பொருபாகம், உதவி பொறியாளர்கள் குமார், நாகராஜன், முருகப்பெருமாள், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர்கள் கண்ணன், ராமர், ரெக்ஸின், பொன்னப்பன், சரவணக்குமார், ஜெயசீலி, தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் அந்தோணிசூசை, முக்கையா, மற்றும் கருணா, மணி, செந்தில்குமார் அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.