அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - நடுநிலை.காம்
Tamil New Year

நெருப்பு,நீர்,நிலம்,காற்று,ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்களை கொண்டது இந்த பிரபஞ்சத்தின் இயக்கம். அதன் இயக்கத்திற்கு பஞ்ச பூதங்கள் அவசியம் என்கிற போது, அதில் சூரியன் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. அதனை தொடக்க பூதமாக கொள்ள வேண்டும். அந்த வகையில் உலகம் முழுவதும் சூரியனை மையமாக வைத்தே தொடக்கங்களை கணித்துள்ளனர். அதாவது நாள்காட்டி முதல் வருட காட்டி வரை சூரியனையே மையமாக கொண்டுள்ளது. அந்த வகையில்தான் தமிழ் நாட்டில் 12 ராசியாக கணித்து வைத்துள்ள மாதங்களில் மேச ராசிக்குள் சூரியன் வரும் நாளையே வருட தொடக்க நாளாக கொண்டுள்ளோம். அதன்படி சித்திரை முதல் நாளை தமிழ் வருடத்தின் முதல் நாள் என்று கணக்கில் கொண்டு அந்த நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி சித்திரை 1ம் தேதி(ஏப்ரல் 14ம்தேதி) தமிழ் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது நடுநிலை.காம்
-ஆர்.எஸ்.சரவணப்பெருமாள், 8056585872