தூத்துக்குடி மினி பஸ்களில் அடுத்தடுத்து நடந்த திருட்டு - பயணிகள் கண் முன்னே ஓட்டம் பிடித்த பெண் திருடர்கள்

Theft

தூத்துக்குடி  மினி பஸ்களில் அடுத்தடுத்து நடந்த திருட்டு  - பயணிகள் கண் முன்னே ஓட்டம் பிடித்த பெண் திருடர்கள்

மாவட்ட தலைநகரான தூத்துக்குடிக்கு அன்றாடம் ஆயிரணக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். அதிலும் ஞாயிற்றுகிழமைகளில் பொருட்கள் வாங்குவதற்கான மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். அப்படி வந்து செல்லும் மக்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம், நகைகளை கொள்ளையடுக்கும் கும்பல் அட்டகாசம் செய்து வருவதாக பொருட்களை பறிகொடுத்த பெண்கள் கதறுகின்றனர். இதில் பெரிய கூத்து என்ன வென்றால் பெண்களிடம் கைவரிசை காட்டுவது பெண்கள்தான் என்கிறார்கள். அப்படித்தான் இன்று இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்திருக்கிறது.  எப்போதும்வென்றான் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலபேர் தூத்துக்குடியில் உள்ள தங்கநகை கடைக்கு வந்து அங்கு பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். பின்னர் ஊர் திரும்புவதற்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல மினி பஸ் ஒன்றில் ஏறியிருக்கின்றனர். 

புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற அந்த பேருந்து முழுமையாக நிற்கும் முன்பாக அதிலிருந்து இரண்டு பெண்கள் வேகமாக இறங்கி ஓடியிருக்கின்றனர். எப்போதும்வென்றான் ஊரை சேர்ந்தவர்களின் நகை பைகளை அவர்கள் எடுத்துக் கொண்டு ஓடுவது தெரிந்தது. இதையறிந்த எப்போதும்வென்றான் ஊர் பெண்கள் கத்தி கதிறினர். அப்பெண்களை யாரும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 இதனால் அவர்கள் அங்குள்ள புறக்காவல்நிலையத்திற்கு ஓடினர். அந்த நேரத்தில் புறக்காவல்நிலையமும் மூடப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள். இதனால் அங்கு நின்று கதறினர். அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெண் காவலர் ஒருவர் அங்கு வந்து அவர்களிடம் விசாரணை செய்தார். அவர்களிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது அதே மினி பஸ் எல்லையில் இருந்து கணவன்,மனைவி இரண்டுபேர்கள் பதற்றத்துடன் ஓடிவந்தனர். மினி பஸ்ஸில் வந்தபோது ரூ 5 ஆயிரம் ரூபாயை யாரோ திருடிவிட்டனர் என்றனர். இரண்டு திருட்டு வழக்கும் ஒரே நேரத்தில் ஒரே பெண் காவலரிடம் திணிக்கப்பட அவர் சற்று திணறினார். அதுக்குள்ளாக எப்போதும்வென்றான் குடும்பத்தினரில் ஒரு பெண் மாவட்ட எஸ்.பிக்கு செல்போனில் பேசி தகவலை சொல்லிவிட்டார். உடனே வடபாகம் காவல்நிலையத்திற்கு அனுப்பி உரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்.பியிடம் இருந்து உத்தரவு வர, அனைவரையும் வடபாகம் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தார் பெண் காவலர். 

இந்த விவகாரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி இரண்டு பெண் திருடர்கள் வேகமாக ஓடியிருக்கின்றனர். அவர்களை அடையாளம் காட்டி பொருளை பறி கொடுத்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். ஆனாலும் அவர்களை யாரும் பிடிக்கவில்லை என்றால் என்ன அநியாயம் என்று கேள்வி கேட்க வேண்டியது உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவலர்கள் இருந்திருந்தால் திருடர்கள் இப்படி தப்ப முடியாது. மதியம் நேரங்களில் பொதுவாக காவலர்கள் எங்கும் நிற்பதில்லை. கூட்டம் குறைவாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஞாயிற்றுக்கிழை அதிலும் முகூர்த்தநாள் அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் இடையில் தனியாக அரசு பஸ்கள் எதுவுமே இல்லாமல் மினி பஸ் மட்டுமே இயக்கபடுகிறது. மினி பஸ்ஸில் பொதுவாகவே குறைவாக மக்கள் ஏறினாலும் கூட்டம் அதிகம் இருப்பதுபோல் நெரிசலாக இருக்கும். அந்த நெரிசலை பயன்படுத்தி இதுபோன்ற திருடர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். 

எனவே தூத்துக்குடி புதிய, பழைய பேருந்து நிலையங்களிடையே அரசு பேருந்துகள் சிலவற்றையும் இயக்க வேண்டும். அதுபோல் இரண்டு பேருந்து நிலையங்களிலும் காவல்துறையின் சிறப்பு பார்வை எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்படி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.